Monday, January 21, 2013

தகவல் அறியும் உரிமை சட்டம்: ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு


தகவல் அறியும் உரிமைச் சட்டம்  எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகிறது, அதை மேலும் எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதை மதிப்பீடு செய்ய, மத்திய அரசு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்துக்கு பொதுவாக வரவேற்பு உள்ளதால், இதை மேலும் சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. இதற்காக, இந்த சட்டம் இதுவரை எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எந்தளவுக்கு பயனளித்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காக, ஒரு ஆய்வை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு முழு அளவில் நடத்தப்பட உள்ளது. ஆறு முதல் ஒன்பது மாதங்களில் இந்த ஆய்வை நடத்தி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்துள்ளனர். இந்த சட்டத்தால் எந்த அளவுக்கு லஞ்சம்-ஊழல் குறைந்திருக்கிறது. தகவல்களை அளிப்பதில் அரசுக்கு ஏற்படும் செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. தவிர, தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுவதில் எந்தளவுக்கு மக்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது.
மக்கள் எந்த வகையான தகவல்களை அதிகமாக கேட்டுப்பெற்றுள்ளனர். அரசு நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு கிடைத்த அனுபவம். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வேண்டுகோள்கள் குறித்த போக்கு பற்றியும் விவரங்கள் கேட்டுப்பெற உள்ளன.
தகவல்கள் கேட்பு மற்றும் தகவல்கள் அளிப்பு என்ற இரண்டு நிலைகளிலும், இந்த சட்டத்தை மேலும் பலப்படுத்த, இந்த ஆய்வுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.
கோரிக்கைகளுக்கு நியாயமாகவும், விரைவாகவும் தகவல்களை அளிக்க, இந்த சட்டத்தை கையாளும் பொதுத் தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும்.
இந்த ஆய்வானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் மத்திய, மாநில, மாவட்ட, பஞ்சாயத்து நிர்வாகங்கள் நிலையிலும் நடைபெறவுள்ளது. இந்த சட்டம் குறித்து, கருத்து மற்றும் தகவல் தெரிவிக்க விரும்பும் நிறுவனங்கள், இம்மாதம் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கலாம் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

Tuesday, January 1, 2013

தகவல் உரிமை ஆர்வலருக்கு நச்சு ஊசிக்குத்து

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என். சீனிவாசராவ் மீது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நச்சுப்பொருள் கொண்ட ஊசியைக் கொண்டு தாக் குதல் நடத்தினர்.பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மர்கா பூர் நகரில் இச்சம்பவம் நடந்தது. ஊசியால் குத்தப்பட்ட வுடன் சீனிவாச ராவ் மயக் கம் அடைந்து விழுந்தார். அவரை உடனடியாக மர்கா பூர் பகுதியில் உள்ள மருத் துவமனைக்கு தூக்கிச்சென் றனர். பின்னர் அவர் அங்கி ருந்து ராஜீவ் காந்தி மருத் துவ அறிவியல் கல்விக்கழக மருத்துவமனைக்கு எடுத் துச்செல்லப்பட்டார். வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் அவருக்கு எதிராக மர்காபூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரு வதற்கு முதல் நாள் இத்தாக் குதல் நடந்துள்ளது.தகவல் உரிமை ஆர்வல ரின் ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு உள்ளிட்ட உடல் நல அறிகுறிகள் இயல்பாக உள்ளன என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ராஜேஸ்வர ராவ் கூறினார். அவர் தெளிவின்றி காணப்படுகிறார். ஆனால் வார்த்தைகளில் அழைத் தால் அவர் எதிர்வினை யாற் றுகின்றார் என்றும் அவர் சொன்னார். தொடக்க நச்சுப்பொருள் சோதனை களில் நச்சுப்பொருள் எது வும் சுட்டிக்காட்டப்பட வில்லை என்று மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் கே.ரகுராம் ரெட்டி கூறினார்.ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனைச்சா லைக்கு ரத்தமாதிரிகள் விரிவான சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என் றும் அவர் தெரிவித்தார். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிக ளுக்கு எதிராக சீனிவாச ராவ் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தைப் பயன் படுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்திருப்பதாக அவர் புகார் தெரிவித் துள்ளார்.