Sunday, January 3, 2010

மேல்முறையீடு

முதல் மேல்முறையீடு :

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செடீநுதால். விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார். இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செடீநுயுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செடீநுது கொளல் வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீடு :

முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநிலதகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு மேலும் தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம். முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும்.

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு

மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும். தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

மாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள்

இச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 15-ன் படி, தமிடிநநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமை ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீடிந 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. எந்த ஒரு நபரிடமிருந்தும் கீடிநக்காணும் நிலைமைகளில் புகார்களைப் பெற வேண்டியது, மாநில தலைமைத் தகவல் ஆணையத்தின் கடமையாகும்:-

1. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாததால் தகவல் கோரி விண்ணப்பிக்க இயலாத நிலைமை;

2. கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்ட நிலைமை;

3. தகவல் கோரி விண்ணப்பித்தும் அதற்குரிய காலக்கெடு கடந்த பின்பும் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலைமை;

4. நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்கட்டணம் நியாயமற்றதாக ஒருவர் கருதும் நிலைமை;

5. தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதல்ல என்றோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றோ ஒருவர் நினைக்கும் நிலைமை. இச்சட்டம் பிரிவு 18 ன்கீடிந ஆணையம்

விசாரணை தொடங்கலாம். நியாயமான காரணங்களின்கீடிந, உரிய விசாரணைக்கு உத்தரவிடுதல் வேண்டும். இப்பிரிவின் படி, ஒரு கோரிக்கையை விசாரிக்கையில், குடிமையியல் நீதிமன்றங்களுக்கு

நிகரான அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறையே:

1. நபர்களின் வருகைக்கு அழைப்பாணை அனுப்பி வலிந்து செயல்படுத்துதல்; வாய்மொழி அல்லது

எழுத்து பூர்வமான சாட்சியத்தை கொடுக்கவும் மற்றும் ஆவணங்களையும், பொருள்களையும் முன்னிலைப்படுத்த கட்டாயப்படுத்துதல்;

2. ஆவணங்களை கண்டறிந்து ஆய்வு செய்திட ஆணையிடுதல்;

3. பிரமாணப்பத்திரங்கள் மூலம் சாட்சியங்கள் பெறுதல்;

4. சாட்சிகள் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக அழைப்பாணை பிறப்பித்தல்;

5. குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் குறித்து;

6. இச்சட்டத்தின்படி, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலுள்ள பதிவுருக்கள் எதனையும் ஆடீநுவு செடீநுயலாம் மற்றும் அத்தகைய பதிவுருக்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படலாகாது. கீழ்க்கண்ட அறிவுப்புகள் மூலம் ஆணையம் தனது முடிவுகளை இச்சட்டத்தின் பிரிவு 19 வகைமுறைகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவை முறையே,

1. குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை வேண்டுமிடத்து, அவற்றினை அவ்வடிவத்திலேயே அணுகிப் பெறுதல் ;

2. நேர்விற்கேற்ப, பொது தகவல் அலுவலர் ஒருவரை நியமித்தல் ;

3. குறித்த சில தகவலை அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் ;

4. பதிவுருக்களைப் பராமரித்தல், நிர்வகித்தல் மற்றும் அழிப்பதற்கு தொடர்புடைய நடைமுறைகளில், அவசியமான மாற்றங்களைச் செய்தல் ;

5. அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் மீதான பயிற்சிக்கு வகை செய்தலை மேம்படுத்துதல் ;

6. ஆண்டறிக்கை தயாரித்து அளித்தல். மேலும் ஆணையத்திற்கு தனது முடிவின் மீது கீடிநக்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன :-

1. இழப்பு அல்லது பாதிப்பு உண்டாக்கிய பிற கேடு எதுவாகிலும், முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களை வேண்டுறுத்தும் அதிகாரம் ;

2. இச்சட்டத்தின்படி வகைசெய்யப்பட்ட தண்டனைகளில் எதனையும் விதிக்கும் அதிகாரம் ;

3. விண்ணப்பத்தினை ஏற்கவோ, மறுக்கவோ உண்டான அதிகாரம்,

இச்சட்டப்பிரிவு 19 (9)ன்படி, ஆணையம், மேல்முறையீட்டாளருக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த

அலுவலகங்களுக்கும், தனது முடிவைக் குறித்த அறிவிப்பினைக் கொடுத்தல் வேண்டும்

அதனுடன் மேல்முறையீடு செடீநுவதற்கான உரிமை பற்றியும் கொடுத்தல் வேண்டும். பிரிவு 19(10)-ன்படி வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க, ஆணையம் மேல்முறையீட்டினை முடிவு செய்தல் வேண்டும்.

மூன்றாம் தரப்பினரின் தகவல்

பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக்கருதப்படுகிற தகவல்கள், பதிவுருக்கள் அதன் பகுதிகள் எதனையும் வெளியிடுமிடத்து, அக்கோரிக்கை பெற்ற ஐந்து நாட்களுக்குள், அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும். அதனுடன் மேற்படி தகவலை வெளியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியாகவோ தனது கருத்தினை அனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும்.

மேலும், அந்த தகவலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும்போது, மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேற்படி அறிவிப்பு சார்பு செய்யுமிடத்து, அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், அந்தத் தகவலை வெளியிடுவதற்கு எதிராக முறையீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய தகவல்களை

வெளியிடுவது குறித்து முடிவு எடுத்து, அம்முடிவைப் பற்றிய அறிவிப்பை, மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவில் அளிக்க வேண்டும். அதனுடன் அம்முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.

விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற

அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது. அவை முறையே:

1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

3. தனிப்பிரிவு

4. பாதுகாப்புப்பிரிவு

5. கோர்செல் சி.ஐ.டி.

6. கருக்கெழுத்து அமைவனம்

7. மாவட்டத்தனிப்பிரிவுகள்

8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள்

9. தனிப்புலனாய்வு செல்கள்

10. ஆணையரகங்கள்/

11. மாவட்டங்களிலுள்ள நக்சலைட்டு தனிப்பிரிவு

12. குற்றப்பிரிவு சி.ஐ.டி.

13. தனிப்புலனாய்வுக்குழு

14. திரைத்திருட்டு பிரிவு

15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம்

16. கொள்கைக்கெதிர் பிரிவு

17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் 1, 2

18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம்

19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை

20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை)

21. கணினி குற்றப்பிரிவு

22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள்

23. சிறப்புப்பணிப்படை

24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி

25. கடலோரக் காவல்படை

26. விரல் ரேகைப்பிரிவு

27. காவல் துறை வானொலிப்பிரிவு

28. உள் (காவல் 6) துறை

29. உள் (கடும் மந்தணம்) துறை

30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம்.

தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரித்தளித்தல்


தகவலினை பெறுவதற்கான கோரிக்கையானது, வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டிருக்கிற தகவலுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்கிற காரணத்தால் நிராகரிக்குமிடத்து,

வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பட்ட பகுதியிலிருந்து, நியாயமான முறையில் பிரித்தளிக்கப்படக் கூடிய தகவல் எதுவும் அளிக்கலாம். அவ்வாறு வழங்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர்,

விண்ணப்பதாரருக்குக் கீழ்க்கண்ட அறிவிப்பை அளித்தல் வேண்டும்:-

1. வெளியிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுருவிலிருந்து பிரித்தெடுத்தபின், கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும்;

2. பொருண்மை பற்றிய எந்த முடிவையும் உள்ளடங்கலாக, அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருளைக் குறிப்பிட்டு, அந்த முடிவிற்கான காரணங்கள்;

3. அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவியின் பெயர்;

4. அவரால் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் விவரங்களையும், விண்ணப்பதாரர் வைப்பீடு

செய்யுமாறு கோரப்பட்ட தொகையையும் தெரிவித்தல்;

5. தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை, மறு ஆய்வு செய்வதற்கு, பணி மூப்பு அலுவலர் அல்லது மாநில தகவல் ஆணையம் பற்றிய விவரங்கள்,கட்டணத்தொகை, தகவல் பெறும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றைத் தெரிவித்தல் வேண்டும்.