Wednesday, March 10, 2010

"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டது'

"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டது' என்ற, டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது."நீதிபதிகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண் டும்' என, சுபாஷ் அகர்வால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்குப் பதிலளித்த சுப்ரீம் கோர்ட், "தலைமை நீதிபதியிடம் மற்ற நீதிபதிகள் சமர்ப் பிக்கும் சொத்து விவரங்கள் தனிப்பட்டவை. அதை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது' என, தெரிவித்தது. அதிக அளவில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடித்தால், அது நீதித்துறையின் தனித்தன்மையை பாதிக்கும் என்றும் கருத்துக் கூறியது.

இதை, எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம் பிற்கு உட்பட்டதே. அந்தச் சட் டப்படி நீதிபதிகள் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாம்' என, உத்தரவிட்டது.தனி நீதிபதி அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில், சுப்ரீம் கோர்ட் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் முரளிதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித் துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட் பட்டதே. நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு என்பது, நீதிபதியின் தனிப்பட்ட உரிமை தொடர்பானது அல்ல. அவருக்கு உள்ள பொறுப்பு தொடர் பானது.

தகவல் உரிமைச் சட்டப்படி, தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது ஆணையம். கீழ் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எல்லாம் பணி விதிமுறை களுக்கு கட்டுப்பட்டு, தங்களின் சொத்து விவரங்களை அறிவிக் கின்றனர்.அப்படிப்பட்ட நிலையில், மேல் கோர்ட் நீதிபதிகள் மட் டும், தங்களுக்கு அதுபோன்ற பொறுப்பு இல்லை என, சொல்ல முடியாது.

அவர்கள் தங்களின் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பொறுப்புடைமையை உறுதி செய்ய கீழ்கோர்ட் நீதிபதிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்கிற போது, அரசியல் சட்ட கோர்ட்டுகளின் நீதிபதிகளும் தங்கள் ஆஸ்தி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமே.நாட்டில் முழுமையான ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் எனில், நீதித்துறை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம்.ஆகவே, தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வராது என்ற சுப்ரீம் கோர்ட்டின் மனுவை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட், தங்கள் கோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்ய உள்ளது. ஹோலி விடுமுறை முடிந்து ஒருவார காலத்துக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் இன்று திறக்கப் படுகிறது. அட்டர்னி ஜெனரல் வாகன் வதி சுப்ரீம் கோர்ட்டின் சார்பில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து வாதாட உள்ளார். ஐகோர்ட்டின் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படி வாகன்வதி, தனது வாதத்தில் குறிப்பிட உள்ளார்.