Tuesday, January 1, 2013

தகவல் உரிமை ஆர்வலருக்கு நச்சு ஊசிக்குத்து

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என். சீனிவாசராவ் மீது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நச்சுப்பொருள் கொண்ட ஊசியைக் கொண்டு தாக் குதல் நடத்தினர்.பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மர்கா பூர் நகரில் இச்சம்பவம் நடந்தது. ஊசியால் குத்தப்பட்ட வுடன் சீனிவாச ராவ் மயக் கம் அடைந்து விழுந்தார். அவரை உடனடியாக மர்கா பூர் பகுதியில் உள்ள மருத் துவமனைக்கு தூக்கிச்சென் றனர். பின்னர் அவர் அங்கி ருந்து ராஜீவ் காந்தி மருத் துவ அறிவியல் கல்விக்கழக மருத்துவமனைக்கு எடுத் துச்செல்லப்பட்டார். வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் அவருக்கு எதிராக மர்காபூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரு வதற்கு முதல் நாள் இத்தாக் குதல் நடந்துள்ளது.தகவல் உரிமை ஆர்வல ரின் ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு உள்ளிட்ட உடல் நல அறிகுறிகள் இயல்பாக உள்ளன என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ராஜேஸ்வர ராவ் கூறினார். அவர் தெளிவின்றி காணப்படுகிறார். ஆனால் வார்த்தைகளில் அழைத் தால் அவர் எதிர்வினை யாற் றுகின்றார் என்றும் அவர் சொன்னார். தொடக்க நச்சுப்பொருள் சோதனை களில் நச்சுப்பொருள் எது வும் சுட்டிக்காட்டப்பட வில்லை என்று மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் கே.ரகுராம் ரெட்டி கூறினார்.ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனைச்சா லைக்கு ரத்தமாதிரிகள் விரிவான சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என் றும் அவர் தெரிவித்தார். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிக ளுக்கு எதிராக சீனிவாச ராவ் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தைப் பயன் படுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்திருப்பதாக அவர் புகார் தெரிவித் துள்ளார்.