Friday, December 23, 2011

7 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன தினமும் 20 கோடி பேர் பட்டினி கிடக்கும் நாட்டில்

கடந்த 10 ஆண்டுகளில், ரூ.330.71 கோடி மதிப்புள்ள 7.42 லட்சம் டன் உணவு தானியங்கள் பல்வேறு காரணங்களினால் வீணாகியுள்ளது என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கின்றது.

தகவல் உரிமை ஆர்வ லர் ஓம்பிரகாஷ் சர்மாவின் மனுவிற்குப் பதிலளித்த இந்திய உணவுக் கழம் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் போதிய உணவு இல்லாமல் இறப்பவர்களில் முன்றில் 1பங்கு இந்தியாவை சேர்ந்வர்களே அதுவும் ஒரு நிமிடத்திற்கு 5 இந்தியர்கள் இறக்கிறார்கள் ஆண்டுக்கு 25 இலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் ஒருவேலை உணவோடு 20கோடி இந்தியர்கள் படுக்கபோகிறார்கள் ஆனால் இந்திய அரசோ உணவுகளை எலிகளுக்கு கொடுப்போம் மனிதர்களுக்கு அல்ல என்று உச்சநீதிமன்றத்திடமே 

இந்திய உணவுக் கழகம் தனது பதிலில், ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2011 வரையில் ரூ.330.71 கோடி மதிப்பி லான 7.42 லட்சம் டன் உணவு தானியம் வீணாகி யுள்ளது என்று தெரிவித் துள்ளது.

2010-2011 வரையிலான காலகட்டத்தில் ரூ.3.40 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.

Monday, October 17, 2011

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: மறு ஆய்வு இல்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெளிவுபடுத்தினார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் திட்டம் ஏதுமில்லை. இந்தச் சட்டம் தொடர்பான அனுபவங்களை இப்போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். சில காலத்துக்குப் பிறகு, அனுபவம், தேவை மற்றும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நாம் சில மாற்றங்களைச் செய்யலாம். இவையெல்லாம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இவை குறித்து இப்போதே நான் எதுவும் கூற இயலாது.

 இந்தச் சட்டத்தினால் அரசு மட்டுமல்ல, நீதித்துறையும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.


 அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணமும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. ரகசியத்தை ஒரு குமாஸ்தா மூலம் அறிந்துகொள்ள முடியுமெனில், நாம் ரகசிய காப்புப் பிரமாணத்தை மாற்ற வேண்டியதுதான். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம்.

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமா என்று என்னைக் கேட்டால், 'தேவையில்லை' என்றுதான் நான் கூறுவேன்.

 எந்தச் சட்டத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விரிவு படுத்த வேண்டுமெனில் விரிவுபடுத்தலாம்: மேலும் ஆழமாக்க வேண்டுமெனில் ஆழப்படுத்தலாம்: விதிவிலக்குகள் தரவேண்டுமெனில், விதிவிலக்கு தரலாம். தற்போது இச்சட்டத்திலிருந்து சிபிஐக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இச்சட்டத்தால் கேள்வி கேட்கப்படுகின்றன. ஏன் குறிப்பிட்ட நீதிபதி மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்? மற்றவருக்கு ஏன் அத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை? என்பது போன்ற கேள்விகளும் இச்சட்டத்தின் உதவியால் எழுப்பப்படுகின்றன என்றார் சல்மான் குர்ஷித்

Wednesday, August 17, 2011

RTI போராளி ம.பி.யில் கொலை

பெண் தகவல் உரிமையாளர் ஷேஹ்லா மசூத், கோஹ் - இ- பிசா பகுதி யில் உள்ள அவரது பங்க ளாவின் முன் அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஆதர்ஷ் கட்டியார் கூறினார்.

காரில் அமர்ந்திருந்த போது ஷேஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார் என் றும், குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிர தம் இருந்த ஷேஹ்லா பல் வேறு மேம்பாட்டுத் திட் டங்களில் தன்னை ஈடு படுத்தி வந்தார். மத்தி யப்பிரதேச வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் மடிந்து வருவது குறித்தும் அவர் பிரச்சனைகளைக் கிளப்பி வந்தார்.

Thursday, August 11, 2011

RTI:விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு

நாட்டில் உள்ள சட்டங் களின்படி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் முக் கிய தீர்ப்பு அளித்துள்ளது.

மாணவர்களின் விடைத் தாள்களின் மீதான மதிப் பீடுகளைத் தெரிந்து கொள் ளும் உரிமை மாணவர் களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந் திரன் மற்றும் ஏ.கே.பட் நாயக் ஆகியோரடங்கிய பெஞ்சு தெரிவித்துள்ளது.

‘‘விடைத்தாள்களை ஆய்வு செய்தலை நிராகரித் திருப்பதானது ஏற்கத்தக் கல்ல’’ என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித் திட்ட தீர்ப்பை உச்சநீதி மன்ற பெஞ்சு இப்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், கொல்கத்தா பல்கலைக் கழகம், இந்திய சார்டர்டு அக்கவுண்டண்ட் இன்ஸ்டிட்யூட், மேற்குவங்க மத்திய பள்ளித் தேர்வா ணையம் மற்றும் மத்திய இடைநிலைப் பள்ளிகள் வாரியம் ஆகியவை மேல் முறையீடுகள் தாக்கல் செய் திருந்தன. இதேபோல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத் தாள்களைக் காண்பிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் அரசு பொதுத் தேர்வு ஆணையமும், பீகார் அரசு பொதுத் தேர்வு ஆணைய மும்கூட ஆட்சேபணைகள் தெரிவித்து மேல்முறையீடு கள் செய்திருந்தன. மேற்படி அமைப்புகள் அனைத்தும் கொல்கத்தா உயர்நீதிமன் றம் 2009 பிப்ரவரி 5 அன்று இது தொடர்பாக பிறப்பித் திருந்த தீர்ப்பை ஆட்சே பித்து இவ்வாறு மேல் முறை யீடுகள் செய்திருந்தன.

இவ்வாறு இவை தாக் கல் செய்திருந்த மேல்முறை யீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எந்த ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ மட்டும் திருத்தப்பட்ட விடைத் தாள் களைத் தங்கள் வசமே வைத் திருக்கும் உரிமையைத் தேர்வு நடத்தும் அமைப்பு கள் வசம் ஒப்புவித்திடக் கூடாது என்கிற உயர்நீதி மன்றத்தின் முடிவுகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

விடைத்தாள்களின் மதிப்பெண்கள் அளித்தி ருப்பதை வெளிப்படுத்து வது என்பதும், அவற்றை மாணவர்கள் ஆய்வு செய் திட அனுமதிப்பது என்ப தும் தேர்வு முறையையே நிலைகுலையச் செய்து விடும் என்று இந்த அமைப் புகளின் சார்பில் முன்வைக் கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட் டது.

கொல்கத்தா உயர்நீதி மன்றமானது தன்னுடைய டிவிஷன் பெஞ்சு மூலம் அளித்திருந்த தீர்ப்பில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் அல்லது பல்கலைக் கழ கங்கள் தாங்கள் நடத்தும் தேர்வுகளில் மாணவர் களின் விடைத்தாள்கள் எவ் வாறு மதிப்பீடு செய்யப் பட்டிருக்கின்றன என்று பரிசீலிக்கும் உரிமை, தகவல் அறியும் சட்டத்தின் வரை யறைப்படி மாணவர்க ளுக்கு உண்டு என்று தீர்ப் பளித்திருப்பதை உச்சநீதி மன்றம் அப்படியே ஒப்புக் கொண்டுள்ளது.

‘‘தாங்கள் எழுதிய விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப் பட்டிருக்கும் விதத்தை மீண்டும் அந்த மாணவர்கள் பார்ப்பதென்பது அவர்கள் தங்கள் தரத்தை மேலும் முன்னேற்றிக்கொள்வதற்கு நிச்சயமாக உதவிடும். விடை களைத் திருத்துவதற்காக நியமனம் செய்யப்படும் ஆராய்வாளர்கள் விடை திருத்துவோர், அவ்வாறு நியமித்திடும் வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங் களின் ஊழியர்கள் கிடை யாது. அவர்கள் அத்தகைய அமைப்புகளின் ஒழுங்கு முறை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்’’ என் றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Tuesday, May 24, 2011

தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி


தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

அனுப்புநர்

(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)

பெறுநர்

(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)

ஐயா/அம்மையீர்,

தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் விவரம்

2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.

( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )

3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி

கேட்டுக்கொள்கிறேன்.

(ஆவணங்களின் விவரம்)

4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு

கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.

5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு

கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

நாள்

விண்ணப்பதாரர் கையொப்பம்

Tuesday, March 8, 2011

களப்பலியாகும் தகவல் உரிமைப் போராளிகள்!தகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான பேராயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏட்டளவில் இருக்கும் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் எப்படி ஆளும் வர்க்கத்தால் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன என்பதை தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணர முடிந்தது. இப்படியாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் தகவல் உரிமைப் போராளிகள் உருவானார்கள். சமீபத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழல் எப்படி சிதைக்கிறது? என்பதை தகவல் உரிமைப் போராளிகள் வெளிக்கொணர்ந்தனர். ஆனால், அவர்கள் ஊழல் பேர்வழி மற்றும் சமூக விரோத கும்பல்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நேர்மைக்காக போராடுபவர்கள் கொல்லப்படுவது முதல் முறை அல்ல. மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 35 வயது இளைஞர் நியாமத் அன்சாரி கொல்லப்பட்டார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமலாக்கத்துக்கு வருவதில் உறுதியாக இருந்த தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜீன் டிரெஸ் ஸின் நெருங்கிய நண்பர் அன்சாரி. அவர்கள் முன்னாள் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பு வேலை உறுதித் திட்டத்தில் நியாயமான கூலியை உழைப்பாளர்கள் பெறுகின்றனரா? என்பதை கண்காணிக்கும் வேலையைச் செய்தது.

2009 இல், வேலையே செய்யாத 78 பேருக்கு, அரசு நிர்வாகத்தினர் கூலி கொடுத்திருப்பதை அறிந்த அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். 2011 பிப்ரவரியில், ராணிகலா கிராம ஊராட்சியில் நடைபெற்ற ஊரக வேலை உறுதிச் சட்ட மோசடியை வெளிக்கொணர்ந்தார். அவர்களின் அறிக்கையை மைய
மாகக் கொண்டு, முக்கியக் குற்றவாளி கைலாஷ் சாஹுவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அவர் மானிகா கிராமத்தின் முன்னாள் பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்). அவரிடம் இருந்தும், அவரது கூட்டாளியான ராகலா கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்தும் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், சில தினங்களிலேயே அன்சாரி கொல்லப்பட்டார்.

ஆவணங்களில் பெயர் பதிவாகியிருந்த மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடைய மற்றுமொரு கூட்டாளி, ஷன்கர் டுபே என்ற ஒப்பந்ததாரர் இப்போதும் தண்டிக்கப்படவில்லை.இந்த நிலையில், மக்கள் நல அமைப்புகளின் பல்வேறு உறுப்பினர்களும், சமூக மற்றும் மனித உரிமைப் போராளிகள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து நியாமத் அன்சாரியின் நண்
பர் குர்ஜித் சிங், “அன்சாரியின் மரணம், தகவல் உரிமைப் போராளிகள் இந்த அரசின் கீழ் எத்தனை பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது” என்றார்.

கடந்த 2008 ஆம் இதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் லலித் மேதா என்ற போராளி கொல்லப்பட்டபோது அன்சாரியின் நண்பர் ஜீன் டிரெஸ், “இப்படியான செயல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஜார்க்கண்டில் சமூக விரோத சக்திகளுக்கு எத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலையை காட்டுகிறது” என்றார்.

மற்றொரு தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹார்ஸ் மந்தர் “இதுபோன்ற நிகழ்வுகள், நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று ஒரு தனி மனிதன் சொல்வது எத்தனை ஆபத்தான விசயமாக இருக்கிறது” என்பதைக் காட்டுகிறது என்றார்.

தகவல் உரிமைப் போராளியான நிகில் தே, “சுயநல விருப்பங்களைத் தகர்க்கக் கொடிய ஆயுதமான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஆனால், சுயநல எண்ணங்களோ வன்முறை, குற்றவாளிகள் மற்றும் பணத்துடன் இணைந்து மேலும் வலிமையாகி இருக்கிறது. ஒவ்வொரு தகவல் உரிமைப் போராளியும் ஊழலுக்கு எதிராக முக்கிய அடியை எடுத்து வைக்கிறார் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவரே. தகவல் உரிமைச் சட்டம், இந்த போராளிகளைப் பாதுகாக்கவும் வழி வகை செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டு வரவேண் டும்” என்றார்.

அனிஸ் வனாய்க் என்ற ஆய்வாளர், கடந்த ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மட்டும் 11 மாநிலங்களில் 40 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக கூறுகிறார். தகவல் உரிமைப் போராளிகளை பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொணர வேண்டுமென்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் 2010 ஆகஸ்டில், அமைச்சரவை இப்படியான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.

ஆனால், அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தையே நீர்த்து போக செய்யும் வேலையும் இந்த திருத்தத்தில் இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது என தகவல் பெறும் உரிமை போராளிகள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக தகவல் கேட்பவர்கள் ஒரு பொருள் குறித்து மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகவல்களை திரட்ட ஆகும் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களும் இதற்குள் இருக்கிறது என்கின்றனர். சட்டத்தின் உயிர்நாதமாக விளங்கும் முக்கிய சரத்துகளை நீக்கி விட்டு, போராளிகளைப் பாதுகாப்பது குறித்த திருத்தமும் இருக்கிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே மத்திய அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் திருத்தங்களை கைவிட்டு, தகவல் பெறும் உரிமை போராளிகளை பாதுகாக்கும் திருத்தத்தை உறுதியாக கொண்டுவருவதே தகவல் பெறும் உரிமை சட்டம் உயிரோட்டமாக இருப்பதற்கு உதவி செய்யும்.

Thursday, February 3, 2011

அய்யய்யோ! கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் "பகீர்'


பெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் முரண்பட்டுள்ளன. இந்த கணக்குப் படி, ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை யில் நான்கு, "காணாமல்' போய்விட்டன.


பெரியநாயக்கன் பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். 2009ம் ஆண்டு நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில், 20 கேள்விகளை கேட்டிருந்தார். அதில் கிடைத்த பதில் களில், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள், முரண்பாடான தகவல்களை தெரிவித்திருந்தனர்.


நாயக்கன் பாளையம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு பெரியநாயக்கன் பாளையம் பி.டி.ஓ., (கிராம ஊராட்சி), பொது தகவல் அலுவலர் ஆகியோர், 13 ஆழ்குழாய் கிணறுகள், 21 கைப்பம்பு, 21 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதே கேள்விக்கு நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர், 17 ஆழ்குழாய் கிணறுகள், 16 கைப்பம்புகள், 18 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 4 ஆழ்குழாய் கிணறுகள், 5 கைப்பம்புகள், 3 மின் மோட்டார்கள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. நாயக்கன்பாளையம் சின்னராஜ் கூறியதாவது: சமுதாய பொறுப்பில் உள்ளவர்களின் இது போன்ற பதிலால், உண்மையான விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.


நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மொத்த "டிவி'க்களின் எண்ணிக்கை 12 என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். ஊராட்சித் தலைவர் ஆறு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார். மீதமுள்ள ஆறு "டிவி'க்கள் எங்கே போனது? பல கேள்விகளுக்கு பதில்கள் முரண்பாடாக உள்ளன.இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சின்னராஜ் கூறினார்.

Friday, January 21, 2011

R T I :உடலிருக்க உயிரை பறிப்பதா?


உடலிருக்க உயிரை மட்டும் பறிப்பது போல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்க அதனை பயன்படுத்த விடாமல் முடக்கும் வேலை யில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

தகவல்பெறும் உரிமைச் சட்டம் இடதுசாரி கட்சிகளின் உறுதியான போராட்டத்தால் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டது. அதன் பின்னர் அந்த சட்டத்தின் துணை யோடு இன்று நாடு முழுவதும் அரசு நிர்வாகத் தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமே அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப் படைத்தன்மையாக இருக்க வேண்டும்; பொது மக்களுக்கு தேவையான தகவல்களை தரு வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே.

இச்சட்டம் அதிகார மட்டத்தில் இருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதற் கும், விதிமுறைகளை மீறுவதற்கும் இடையூ றாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர். மேலும் பல ஊழல்பேர்வழிகளுக்கும் இச்சட்டம் வேப் பங்காயாகக் கசக்கிறது. உதாரணமாக தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் மற்றும் வடி கால் திட்டத்திற்கான ஆய்வை யாரிடம் கொடுப் பது என்று பரிசீலனை நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகவங்கி தலையிட்டு “ பிரைவேர் அவுஸ்கூப்பர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு முறை கேடாக ஒதுக்க வைத்தது அம்பலமானது. அதே போல் எவ்வித நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இன்றி முறைகேடாக பிரதமரின் வலதுகரமாக செயல்படும் மாண்டேக்சிங் அலு வாலியாவின் மகன் திட்ட ஆலோசகர் பதவி யில் அமர்த்தப்பட்டதும் இச்சட்டத்தின் தகவ லின் படி அம்பலமானது.

இப்படிப்பட்ட ஏராளமான மோசடிகளுக்குத் துணைநிற்கும் மத்திய அரசிற்கே இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இடையூறாக இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத்தில் திருத்தம் என் கிறபெயரில் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய் வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உரு வாக்கியிருக்கிறது. அதாவது தகவல் பெற விண் ணப்பிப்போர் ஒரு பொருள் குறித்து மட்டுமே விபரங்கள் கேட்க வேண்டும்; விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண் டும்; விண்ணப்பதாரர்கள் கேட்கும் தகவல் களைத் திரட்டச் செலவு ஆகும் பட்சத்தில் அத னை முழுமையாக விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத் தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒரு பொருள் குறித்த விபரங்களை மட்டும் பெறுவ தால் ஒரு தகவலை முழுமையாகப் பெற முடியாது. இதன் மூலம் முழுமையான தகவலை பெற பல வருடங்கள் இழுத்தடிக்கப்படலாம். மேலும் தகவல் பெற செலவு என்ற வகையில் விண்ணப்பிப்போரிடம் இருந்து பணத்தை கறந்து விரக்தியடையச் செய்ய முடியும். இதற் குள் நுட்பமான விஷயம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. அதாவது சாதாரண மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாத அளவில் விலக்கி வைப்பது. இப்படிச் சட்டம் இருக்க அத னைச் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதற்கே இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவி செய்யும். ஒட்டுமொத்தத்தில் சட்டம் கொண்டு வந்த நோக்கமே குழி தோண்டி புதைக்கப்படும்.

மறுபுறம் தமிழக அரசோ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள், அத்துமீறல் களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகத்தன் மை காப்புப் பிரிவுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி இச்சட்டத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப் பட்டு வருகிறது.

Wednesday, January 19, 2011

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேசத்தின் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டதை மறைக்கப்பார்ப்பதா


வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து முழு தகவல்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு தயக்கம் காட்டுவதாகவும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் விஷயத்தில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுவதாகவும் உள்ளது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வங்கிகளில் பல லட்சம் கோடி கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த கறுப்புப் பணத்தை முதலீடு செய்த இந்திய நபர்கள் யார் என்கிற விவரத்தை வெளியே கொண்டு வருவ தில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்றம் புதனன்று தெரிவித்தது.

சுவீஸ் வங்கிகளில் இந் திய தலைவர்கள், தொழிலதிபர்கள் ரூ.21 லட்சம் கோடியை பதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணை யதளமும் செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் பதுக்கல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முன் னாள் அமைச்சர் ராம்ஜெத் மலானி சார்பில் பொது நலன் வழக்கு தொடரப்பட் டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வாயம், அயல்நாடுகளில் உள்ள இந்திய கறுப்புப் பணம் குறித்து அரசு தகவல் பெறு வதில் உள்ள தயக்கத்தை சுட்டிக்காட்டியதுடன் இவ்விவகாரத்தில் அரசுக்கு அக்கறையில்லை என்ப தையே இது காட்டுகிறது என்று கண்டித்தது.

அயல்நாடுகளில் பதுக் கப்பட்ட இந்தியப் பணம் மறைக்கப்பட்ட விவகா ரத்தை பேசும்போது, பல நாடுகளுடன் மேற்கொள் ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேச வேண்டியுள் ளது என்றும் உச்சநீதிமன் றம் கடுமையாக கூறியது. அரசு தாக்கல்செய்துள்ள அதிகாரப்பூர்வ அறிக் கையில் நிதித்துறை செய லாளர் கையெழுத்திட வேண் டும். ஆனால், இயக்குநர் அளவிலான அதிகாரியே கையெழுத்திட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட் டிக்காட்டியது. அயல்நாடு களில் குறிப்பிட்ட இந்தி யர்களால் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் குறித்து அனைத்து விபரங்களும் தெரியவர வேண்டும் என் றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

Monday, January 10, 2011

முதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு?

பொதுமக்களை அரசாங்கத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கும் மனுதாரராக இருப்பதை மாற்றி தமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் மன்னர்களாக்கிய ஓர் அற்புதமான சட்டம்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தகவல் உரிமை ஆணையங்களே அப்படியொரு புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது தமிழகத் தகவல் உரிமை ஆணையம்.

தமிழகத் தகவல் ஆணையத்தின் செயல்பாட்டில் நேர்மையோ, நியாயமோ இல்லை என்று தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்தும், அந்த ஆணையம் தன்னைத் திருத்திக்கொள்ளாத நிலையில், இப்படிப்பட்ட ஓர் ஆணையம் தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமை ஆணையர் உள்பட 11 பேர்வரை அங்கம் வகிக்க தகவல் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத் தகவல் ஆணையத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை?

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன. மக்களுடன் அதிகத் தொடர்புடைய வருவாய், காவல்துறைகளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. இதற்கு உடனுக்குடன் தீர்வு காண தகவல் ஆணையம் முனைப்புக் காட்டாதது ஏன்? வருவாய் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்குப் பதில் அளிப்பது அந்தந்த துணை வட்டாட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்படுகிறது. இதுவே மனுக்கள் தேக்கத்துக்கு காரணம் என்று துணை வட்டாட்சியர்கள் புலம்புகிறார்கள். இது ஏன் அரசின் செவிக்குக் கேட்கவில்லை?

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை பதில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதைத் தமிழகத்தில் உள்ள எந்தத் துறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு முழுக் காரணம் மாநிலத் தகவல் ஆணையமே. மனுதாரர்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்காத அதிகாரிக்கு அதிகபட்சம் | 25,000 வரை அபராதம் விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் இதைத் தமிழகத் தகவல் ஆணையம் செய்வதில்லை. மாறாக, தவறு செய்யும் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கும் பணியை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறது.

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் கிடைக்காவிட்டால் மனுதாரர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட துறையை அணுகி ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று வினவி, நியாயமான காரணம் சொல்லப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நடைமுறை தலைகீழாக உள்ளது. மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் ஆணையம், தவறு செய்த அதிகாரிகளைத் துணிச்சலாகத் தண்டித்து, தகவலைப் பெற்றுத்தருவதை விடுத்து, அதிகாரிகளை அணுகி மனுதாரருக்குத் தகவல் கொடுங்கள் என்று கெஞ்சுகிறதாம். இவ்வாறு கெஞ்சுவது எதற்கு? மாநிலத் தகவல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால்தான் தவறு செய்யும் அதிகாரிகள் துணிச்சலுடன் உலா வருகின்றனர். சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரருக்கு அலுவலகக் கவரில் வெற்றுத்தாளை வைத்து அனுப்பி தாங்கள் தாமதிக்காமல் மனுதாரருக்குப் பதில் அளித்துவிட்டதாகப் பதில் கூறிவிடுகின்றனர்.

தகவல் ஆணைய அதிகாரிகளின் பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடும், மக்கள் பிரச்னைகளின் வலியை அறிந்திராத, அக்கறையில்லாதவர்கள் நியமிக்கப்படுவதுமே ஆணையத்தின் மெத்தனச் செயல்பாட்டுக்குக் காரணம். எனவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள, தகவல் உரிமை ஆர்வலர் ஒருவரையும் தகவல் ஆணையராக நியமிக்கலாம்.

தில்லி அரசு சைலேஷ் பாபு என்ற தகவல் உரிமை ஆர்வலரைத் தகவல் ஆணையராகநியமித்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்கலாமே?

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயலர், தகவல் ஆணையாளர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் சென்னையில் 2008-ல் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல்கூட்டத்திலேயே தகவல் அறியும் மனுக்கள் மீது எடுக்கப்படும் அலட்சிய நடவடிக்கை குறித்து பொதுமக்களும், தகவல் ஆர்வலர்களும் சரமாரியாக எழுப்பிய வினாக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டினோம் என்ற நிலைமைக்கு ஆளாகித் தொடர்ந்து கூட்டம் நடத்துவது கைவிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை கையாளும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை தகவல் ஆணையம் பின்பற்றுவதில்லை. இதில் உள்ள நியாயம் என்ன என்பது புரியவில்லை. சாதாரண மக்களின் மனுக்களுக்குக்கூட தகவல் ஆணையம் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறது. இது அவர்களைச் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் தமிழில் மனு தாக்கல் செய்பவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் தாக்கல் செய்வோருக்கு ஆங்கிலத்திலும் கடிதத் தொடர்பு இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இப்படியொரு சட்டம் இருப்பதே 90 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. அரசின் இலவசத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதுபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் மாநிலத்தின் கடைக் கோடியில் வசிக்கும் குடிமகனும் அறியச் செய்திட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பள்ளிப்பாடங்களில் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிகாரிகள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாமல் இருப்பதால்தான் தகவல் ஆணையம் அவசியமாகியுள்ளது. அதிகாரிகள் மக்கள் நலன் கருதி செயல்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்துவிட்டால் இந்தத் தகவல் அறியும் சட்டம் எதற்கு? ஆணையம்தான் எதற்கு?

Sunday, January 9, 2011

23 வயதில் நீதிபதியாகி விட முடியும்


சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும் சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும், முடிக்கப்படுகின்றன.ஹைடெக் வசதிகள், சொகுசான நீதிமன்றக்கூடங்கள் என வியக்க வைக்கிறது சீனாவின் நீதித்துறை

சீனாவின் நீதித்துறை செயல்பாடு களை அறிந்து கொள்வதற்காக உச்ச நீதி மன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு ஒன்று சமீபத்தில் சீனாவுக்குச் சென்றது.

இந்திய பத்திரிகையாளர்கள் சில ரும் உடன் சென்றிருந்தனர். நீதித் துறைக்கு சீன அரசு கொடுத்து வரும் முக்கியத்து வங்கள் குறித்து அவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் வியப்பை அளிக்கின்றன.

சீனாவில் ஒருவரால் 23 வயதில் நீதிபதியாகிவிட முடியும். தேசிய நீதித்துறை தேர்வில் (இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கு ஒப்பானது) வெற்றி பெற்று , உரிய பயிற்சி களை முடித்துவிட்டால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விடலாம். நீதிப தியாக ஆகவேண்டும் என்றால் வழக் கறிஞராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தேசிய நீதித்துறை தேர்வு எழுத பட்டப்படிப்பை நிறைவு செய்தி ருக்க வேண்டும்.

ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றங்களை இந்தியக் குழுவினர் பார்வையிட்டனர். நீதி மன்றங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளைக் கண்டு அவர் கள் அசந்து போயினர்.

நீதிமன்றக் கூடங்கள் ஒரு காப்ப ரேட் நிறுவன அலுவலகத்தைப் போல் காட்சியளிக்கிறதாம். அதி நவீனத் தொழில் வசதிகளுடன் கூடிய சொகுசான நீதிமன்றக் கூடங் களைக் கண்டு வியந்து நீதிபதி சிர் புர்கர், அதற்காக சீன நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சீனாவில் மொத்தம் 1,90,000 நீதி பதிகள் உள்ளனர். அவர்களில் 500 நீதி பதிகளும் ,200 உதவி நீதிபதிகளும் மக் கள் சீனத்தின் உச்சநீதிமன்றங்களில் உள்ளனர்.

சீன நீதித்துறையின் ஒட்டு மொத் தப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,20,000.

ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக் கப்பட்டவுடனேயே முறையிடுபவர் மற்றும் எதிரியின் பெயர்கள் அங் குள்ள திரையில் தெரியுமாம். வழக்கு கள் நடைபெறும் முறை மிகவும் நவீனமாக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்காக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த தக வல்கள், அவரது கைரேகை மற்றும் அவரிடம் இருந்து சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகி யவை திரையில் தெரியுமாம்.

சாட்சிகள் அளித்த வாக்கு மூலங்களை எதிர்த் தரப்பு வழக்கறி ஞரோ, அரசுத் தரப்பு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ பார்க்கலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

கீழமை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆறு மாதக் காலத்திற்குள் ம ரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தண்டனை பெற்றவர் கருணை மனு செய்தால் மரண தண்டனை நிறைவேற்ற 2 ஆண்டுகள் ஆகிவிடும். அந்தத் தண்டனையில் மேல் நீதி மன்றங்கள் திருத்தம் செய்தால், அது ஆயுள் தண்டனையாக (20 ஆண்டு கள்) குறைக்கப்படும்.

சீனாவில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டால், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்ப டுகிறது.

குற்றமற்றவராக இருந்தால் விடு தலை செய்யப்படுவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக் குள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். சிவில் வழக்குகளாக இருந்தால் ஆறு மாதத் திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.

கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சம மான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்குத் தரும் வகையில் நீதிமன்றங்களின் சூழல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் இந்தியக் குழுவினர்.

இந்நேரத்தில் முக்கியச் சம்பவம் ஒன்று நம் நினைவுக்கு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா விரதம் இருந்தார் நீதிபதி ஒருவர். ஏன் தெரியுமா? அவர் பணியாற்றும் நீதி மன்றத்தின் கட்டிடம் படுமோச மாம்.

நீதிபதி அமர்வதற்கு ஒழுங்கான நாற்காலிகூட அங்கு இல்லையாம்!

Sunday, January 2, 2011

தகவல் உரிமை ஆர்வலர் தாக்கப்பட்டார்


பிரபல தகவல் உரிமை ஆர்வலர் அருண்மானே அடையாளம் தெரியாத நபர்களால் டாலே காவ் தபாடே அருகில் தாக்கப்பட்டார். கழிகளால் அடிக்கப்பட்ட மானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை தீவிரமானவையில்லை என்று புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் பி.டேகாவோங்கர் செய்தியாளர் களிடம் கூறினார்.

புனே மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் சதீஷ் ஷெட்டியின் நெருக்கமான சகாவான மானே தகவல் அறியும் உரிமை இயக்கத் தின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை கையாண்டு வருகிறார்.