Tuesday, May 24, 2011

தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி


தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

அனுப்புநர்

(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)

பெறுநர்

(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)

ஐயா/அம்மையீர்,

தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் விவரம்

2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.

( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )

3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி

கேட்டுக்கொள்கிறேன்.

(ஆவணங்களின் விவரம்)

4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு

கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.

5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு

கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

நாள்

விண்ணப்பதாரர் கையொப்பம்

8 comments:

Rajesh said...

LIC நிறுவனத்தில் பாலிசிதாரரின் அனுமதி இன்றி பாலிசி முடிவடையும் ஆண்டு உயர்த்த படுகிறது இதற்கு என்ன தண்டனை கெடைக்கும் இதுவரை எத்தனை பேருக்கு இதுபோல் மாற்ற பட்டுள்ளன என்பதை எப்படி அறிவது

Unknown said...

naan arasu maruthuvamanai maruthuvarai RTI moolan ketkapatta keelvikalukku sariyana thagaval ethuvum tharapatavillai atharkku naan enna seiyavendum sir

VU2WDP said...

பல வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரியபடுதாமலே பெட்டக கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதுவரி யாராவது கேட்டார்களா?

VU2WDP said...

தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி அனைவருக்கும் மிக உபயோகமாக உள்ளது

Unknown said...

முதியோர்காண ஓய்வூதியம் பணம்
பற்றி யாரிடம் தகவல் கேட்பது

Unknown said...

தகவல் அறியும் கட்டணங்கள எங்கு செலுத்த வேண்டும்???

Unknown said...

விண்ணப்பத்தை நேரடியாக அலுவலகத்தில் தர வேண்டுமா அல்லது போஸ்ட் செய்ய வேண்டுமா???

selvaraj said...

தகவல் கேட்டு விண்ணப்ப படிவத்தில் 10 ருபாய் கோர்ட் ஸ்டாம்ப் மத்திய அரசு அலுவலகத்திருக்கு ஒட்டி அனுப்பினேன் ..அதற்க்கு அவர்கள் dd அல்லது போஸ்டல் ஆர்டர் இறந்தால் மட்டும்தான் தகவல் தருவோம் என பதில் அனுப்பி உள்ளார்கள்..இனி என்ன செய்யவேண்டும்

Post a Comment