Sunday, January 3, 2010

தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு


குடிமக்கள் எவருக்கும் கீழ்க்கண்ட தகவலை அளிக்கத் தேவையில்லை:-

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, படைத்திறன், அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த நலன்கள், அயல் நாட்டுடன் கொண்டுள்ள உறவை பாதிக்கப்படும் அல்லது குற்றச் செயலினை தூண்டுதலாக அமையும் தகவல்கள்

நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்ட தகவல்கள் அல்லது அந்த தகவலை வெளிப்படுத்துவதால் நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையக்கூடிய தகவல்கள்;

நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையும் தகவல்கள்;

எந்த ஒரு தகவலானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானது என்று அரசு கருதுகிறதோ அந்தத் தகவல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு தீங்காகும் தகவலான வணிக நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள், அறிவார்ந்த சொத்துடமை உள்ளிட்ட தகவல்கள்;

பொது மக்களின் நலனுக்கு தேவையானது என்று அரசால் கருதப்படுகிற, தனி நபர் ஒருவருக்கு கிடைத்த நம்பகத்தன்மை உடைய தகவல்கள்;

அயல் நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள்;

நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் மற்றும் சட்டத்தினை செயல்படுத்துவதற்காகவும் கிடைத்த மூலம் மற்றும் உதவி ஆதாரங்களை இனங்காட்டக்கூடிய தகவல்கள்;

தனி நபர் உயிர் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தகவல்கள்;

வெளிப்படுத்தப்பட்டால், புலனாய்வு நடவடிக்கைக்கு அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு தடையாயிருக்கும் அல்லது குற்ற வழக்கு தொடர்தலைத் தடை செய்திடும் தகவல்கள்;

அமைச்சர்கள், குழு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் கலந்தாய்வுகள் குறித்த பதிவுருக்கள்

உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள். எனினும் அமைச்சர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதற்கான காரணங்கள், எதன் அடிப்படையில் அம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை, முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாம்;

ஒரு தகவலை வெளியிடுவதால் உள்ள நலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கான தீங்கை விட மிகுந்து

இருக்குமிடத்து, 1923 ம் ஆண்டு அலுவலக சார் ரகசிய சட்டம் 1923 (9/1923) ல் அல்லது தகவல் பெறும்

உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8 ன் படி அனுமதிக்கத்தக்க விலக்களிப்புகள் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும் தகவலை அணுகி பெற அனுமதிக்கலாம்;

ஒரு விண்ணப்பம் செடீநுயப்பட்ட தேதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம், நிகழ்வு அல்லது நடந்த காரியம் தொடர்பான தகவல்கள், தகவல் சட்டம் 2005 பிரிவு 8 உட்பிரிவு 1 (ஏ, சி, எல்) வகைகளுக்கு உட்பட்டு, கோரிக்கையினை செய்த நபருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு முறைகளுக்கு உட்பட்டு, அந்த 20 ஆண்டு காலத்தினை கணக்கிடுவதில் பிரச்சனை எழும் பட்சத்தில், மத்திய அரசின் முடிவே இறுதியானதாகும்;

தகவலை பெறுவதற்கான கோரிக்கையானது, அரசு அல்லாத தனி நபரிடமிருந்து வருகிற பதிப்புரிமையை மீறுவதாக இருக்குமிடத்து, இச்சட்டம் 8ம் பிரிவின் வகை முறைகளுக்கு பாதிப்பின்றி, அக்கோரிக்கையை நிராகரிக்கலாம்.

No comments:

Post a Comment