Sunday, January 3, 2010

தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரித்தளித்தல்


தகவலினை பெறுவதற்கான கோரிக்கையானது, வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டிருக்கிற தகவலுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்கிற காரணத்தால் நிராகரிக்குமிடத்து,

வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பட்ட பகுதியிலிருந்து, நியாயமான முறையில் பிரித்தளிக்கப்படக் கூடிய தகவல் எதுவும் அளிக்கலாம். அவ்வாறு வழங்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர்,

விண்ணப்பதாரருக்குக் கீழ்க்கண்ட அறிவிப்பை அளித்தல் வேண்டும்:-

1. வெளியிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுருவிலிருந்து பிரித்தெடுத்தபின், கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும்;

2. பொருண்மை பற்றிய எந்த முடிவையும் உள்ளடங்கலாக, அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருளைக் குறிப்பிட்டு, அந்த முடிவிற்கான காரணங்கள்;

3. அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவியின் பெயர்;

4. அவரால் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் விவரங்களையும், விண்ணப்பதாரர் வைப்பீடு

செய்யுமாறு கோரப்பட்ட தொகையையும் தெரிவித்தல்;

5. தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை, மறு ஆய்வு செய்வதற்கு, பணி மூப்பு அலுவலர் அல்லது மாநில தகவல் ஆணையம் பற்றிய விவரங்கள்,கட்டணத்தொகை, தகவல் பெறும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றைத் தெரிவித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment