Sunday, January 3, 2010

மேல்முறையீடு

முதல் மேல்முறையீடு :

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செடீநுதால். விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார். இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செடீநுயுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செடீநுது கொளல் வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீடு :

முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநிலதகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு மேலும் தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம். முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும்.

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு

மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும். தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

No comments:

Post a Comment