Sunday, January 3, 2010

கட்டணங்கள்

தகவல் உரிமை சட்டம் 2005, நியாயமான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. மேலும், தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் தேவைப்பட்டால், எவ்வாறு அத்தொகைக் கணக்கிடப்பட்டு அக்கட்டணம் எட்டப்பட்டது என்று சுட்டிக்காட்டி, எழுத்துருவில் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப் படுதல் வேண்டும்.

விண்ணப்பதாரர் பொதுத்தகவல் அலுவலரால் விதிக்கப்பட்ட கட்டண நிர்ணய முடிவின் மீது, உரிய மேல்முறையீட்டு துறையிடம் மறுஆய்வு செய்யுமாறு நாடலாம்.

வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கு, கட்டணம் விதிக்கப்படுதல் கூடாது.

பொதுத்தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்கத் தவறினால், கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அத்தகவலை வழங்குதல் வேண்டும்.

இச்சட்டத்தின் 6(1) பிரிவின்படி தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகத்தால் குறித்துரைக்கப்பட்ட கணக்குத் தலைப்பில், ரூ. 10/- (ரூபாய் பத்து மட்டும்)

ரொக்கமாகவோ, வரைவு காசோலையாகவோ, கருவூல சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

இச்சட்டத்தின்7(1)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால் பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே:-

1. ஏ4, ஏ3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது படியெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் இரண்டு;

2. பெரிய அளவுத் தாளுக்கான படி ஒன்றின் உள்ளபடியான கட்டணம், செலவுத்தொகை;

3. மாதிரிகள் அல்லது மாதிரி படிவங்களுக்கான உள்ள செலவு அல்லது விலை;

4. பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணிநேரத்திற்கு, கட்டணம் எதுவும் இல்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது அதன் பின்னம் ரூ.5 கட்டணம் ஆகும்.

இச்சட்டத்தின் 7(5)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால், பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான

ரொக்க ரசீது, வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே,

1. மின்னணு வழியிலான டிஸ்கெட்/பிளாப்பி ஒன்றிற்கு ரூ. 50 கட்டணம்;

2. அச்சடித்த படிவத்தில் தகவல் வழங்குகைக்கு வெளியீட்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட விலை

No comments:

Post a Comment