Sunday, January 3, 2010

மூன்றாம் தரப்பினரின் தகவல்

பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக்கருதப்படுகிற தகவல்கள், பதிவுருக்கள் அதன் பகுதிகள் எதனையும் வெளியிடுமிடத்து, அக்கோரிக்கை பெற்ற ஐந்து நாட்களுக்குள், அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும். அதனுடன் மேற்படி தகவலை வெளியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியாகவோ தனது கருத்தினை அனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும்.

மேலும், அந்த தகவலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும்போது, மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேற்படி அறிவிப்பு சார்பு செய்யுமிடத்து, அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், அந்தத் தகவலை வெளியிடுவதற்கு எதிராக முறையீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய தகவல்களை

வெளியிடுவது குறித்து முடிவு எடுத்து, அம்முடிவைப் பற்றிய அறிவிப்பை, மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவில் அளிக்க வேண்டும். அதனுடன் அம்முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.

No comments:

Post a Comment