Sunday, January 3, 2010

மாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள்

இச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 15-ன் படி, தமிடிநநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமை ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீடிந 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. எந்த ஒரு நபரிடமிருந்தும் கீடிநக்காணும் நிலைமைகளில் புகார்களைப் பெற வேண்டியது, மாநில தலைமைத் தகவல் ஆணையத்தின் கடமையாகும்:-

1. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாததால் தகவல் கோரி விண்ணப்பிக்க இயலாத நிலைமை;

2. கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்ட நிலைமை;

3. தகவல் கோரி விண்ணப்பித்தும் அதற்குரிய காலக்கெடு கடந்த பின்பும் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலைமை;

4. நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்கட்டணம் நியாயமற்றதாக ஒருவர் கருதும் நிலைமை;

5. தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதல்ல என்றோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றோ ஒருவர் நினைக்கும் நிலைமை. இச்சட்டம் பிரிவு 18 ன்கீடிந ஆணையம்

விசாரணை தொடங்கலாம். நியாயமான காரணங்களின்கீடிந, உரிய விசாரணைக்கு உத்தரவிடுதல் வேண்டும். இப்பிரிவின் படி, ஒரு கோரிக்கையை விசாரிக்கையில், குடிமையியல் நீதிமன்றங்களுக்கு

நிகரான அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறையே:

1. நபர்களின் வருகைக்கு அழைப்பாணை அனுப்பி வலிந்து செயல்படுத்துதல்; வாய்மொழி அல்லது

எழுத்து பூர்வமான சாட்சியத்தை கொடுக்கவும் மற்றும் ஆவணங்களையும், பொருள்களையும் முன்னிலைப்படுத்த கட்டாயப்படுத்துதல்;

2. ஆவணங்களை கண்டறிந்து ஆய்வு செய்திட ஆணையிடுதல்;

3. பிரமாணப்பத்திரங்கள் மூலம் சாட்சியங்கள் பெறுதல்;

4. சாட்சிகள் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக அழைப்பாணை பிறப்பித்தல்;

5. குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் குறித்து;

6. இச்சட்டத்தின்படி, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலுள்ள பதிவுருக்கள் எதனையும் ஆடீநுவு செடீநுயலாம் மற்றும் அத்தகைய பதிவுருக்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படலாகாது. கீழ்க்கண்ட அறிவுப்புகள் மூலம் ஆணையம் தனது முடிவுகளை இச்சட்டத்தின் பிரிவு 19 வகைமுறைகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவை முறையே,

1. குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை வேண்டுமிடத்து, அவற்றினை அவ்வடிவத்திலேயே அணுகிப் பெறுதல் ;

2. நேர்விற்கேற்ப, பொது தகவல் அலுவலர் ஒருவரை நியமித்தல் ;

3. குறித்த சில தகவலை அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் ;

4. பதிவுருக்களைப் பராமரித்தல், நிர்வகித்தல் மற்றும் அழிப்பதற்கு தொடர்புடைய நடைமுறைகளில், அவசியமான மாற்றங்களைச் செய்தல் ;

5. அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் மீதான பயிற்சிக்கு வகை செய்தலை மேம்படுத்துதல் ;

6. ஆண்டறிக்கை தயாரித்து அளித்தல். மேலும் ஆணையத்திற்கு தனது முடிவின் மீது கீடிநக்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன :-

1. இழப்பு அல்லது பாதிப்பு உண்டாக்கிய பிற கேடு எதுவாகிலும், முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களை வேண்டுறுத்தும் அதிகாரம் ;

2. இச்சட்டத்தின்படி வகைசெய்யப்பட்ட தண்டனைகளில் எதனையும் விதிக்கும் அதிகாரம் ;

3. விண்ணப்பத்தினை ஏற்கவோ, மறுக்கவோ உண்டான அதிகாரம்,

இச்சட்டப்பிரிவு 19 (9)ன்படி, ஆணையம், மேல்முறையீட்டாளருக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த

அலுவலகங்களுக்கும், தனது முடிவைக் குறித்த அறிவிப்பினைக் கொடுத்தல் வேண்டும்

அதனுடன் மேல்முறையீடு செடீநுவதற்கான உரிமை பற்றியும் கொடுத்தல் வேண்டும். பிரிவு 19(10)-ன்படி வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க, ஆணையம் மேல்முறையீட்டினை முடிவு செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment