Saturday, January 30, 2010

RTI புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500 அபராதம்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியுரிமை பற்றிய சில ஆவணங்களை தகவலாக கேட்டு கடந்த 8-2-2008 அன்று விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் 3 மாத காலங்கள் ஆகியும் தகவல் தரவில்லை. இதனால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 6-7-2009 அன்று மத்திய தகவல் ஆணையம் விசாரணை நடத்தி 6 வார காலத்திற்குள் அந்த ஆவணங்களை பார்வையிடவும், கட்டண மின்றி அந்த ஆவணங்களை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் அவர்கள் சரியாக நடை முறைப்படுத்தவில்லை. இதனால் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்பேரில் 8-1-2010 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி உரிய நேரத்தில் தகவல் தராததாலும்இ மத்திய தகவல் ஆணையும் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததாலும், புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500- அபராதம் விதித்து உத்தர விடப்பட்டுள்ளது.

சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே உரிய காலத்தில் தகவல் தராததற்கு தண்டனை பெற்றுள்ளது வேதனைக்குரியது. புதுவையில் இதுபோல் பல அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் உரிய காலத்தில் தகவல் தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.