Sunday, January 9, 2011

23 வயதில் நீதிபதியாகி விட முடியும்


சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும் சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும், முடிக்கப்படுகின்றன.ஹைடெக் வசதிகள், சொகுசான நீதிமன்றக்கூடங்கள் என வியக்க வைக்கிறது சீனாவின் நீதித்துறை

சீனாவின் நீதித்துறை செயல்பாடு களை அறிந்து கொள்வதற்காக உச்ச நீதி மன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு ஒன்று சமீபத்தில் சீனாவுக்குச் சென்றது.

இந்திய பத்திரிகையாளர்கள் சில ரும் உடன் சென்றிருந்தனர். நீதித் துறைக்கு சீன அரசு கொடுத்து வரும் முக்கியத்து வங்கள் குறித்து அவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் வியப்பை அளிக்கின்றன.

சீனாவில் ஒருவரால் 23 வயதில் நீதிபதியாகிவிட முடியும். தேசிய நீதித்துறை தேர்வில் (இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கு ஒப்பானது) வெற்றி பெற்று , உரிய பயிற்சி களை முடித்துவிட்டால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விடலாம். நீதிப தியாக ஆகவேண்டும் என்றால் வழக் கறிஞராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தேசிய நீதித்துறை தேர்வு எழுத பட்டப்படிப்பை நிறைவு செய்தி ருக்க வேண்டும்.

ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றங்களை இந்தியக் குழுவினர் பார்வையிட்டனர். நீதி மன்றங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளைக் கண்டு அவர் கள் அசந்து போயினர்.

நீதிமன்றக் கூடங்கள் ஒரு காப்ப ரேட் நிறுவன அலுவலகத்தைப் போல் காட்சியளிக்கிறதாம். அதி நவீனத் தொழில் வசதிகளுடன் கூடிய சொகுசான நீதிமன்றக் கூடங் களைக் கண்டு வியந்து நீதிபதி சிர் புர்கர், அதற்காக சீன நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சீனாவில் மொத்தம் 1,90,000 நீதி பதிகள் உள்ளனர். அவர்களில் 500 நீதி பதிகளும் ,200 உதவி நீதிபதிகளும் மக் கள் சீனத்தின் உச்சநீதிமன்றங்களில் உள்ளனர்.

சீன நீதித்துறையின் ஒட்டு மொத் தப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,20,000.

ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக் கப்பட்டவுடனேயே முறையிடுபவர் மற்றும் எதிரியின் பெயர்கள் அங் குள்ள திரையில் தெரியுமாம். வழக்கு கள் நடைபெறும் முறை மிகவும் நவீனமாக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்காக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த தக வல்கள், அவரது கைரேகை மற்றும் அவரிடம் இருந்து சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகி யவை திரையில் தெரியுமாம்.

சாட்சிகள் அளித்த வாக்கு மூலங்களை எதிர்த் தரப்பு வழக்கறி ஞரோ, அரசுத் தரப்பு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ பார்க்கலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

கீழமை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆறு மாதக் காலத்திற்குள் ம ரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தண்டனை பெற்றவர் கருணை மனு செய்தால் மரண தண்டனை நிறைவேற்ற 2 ஆண்டுகள் ஆகிவிடும். அந்தத் தண்டனையில் மேல் நீதி மன்றங்கள் திருத்தம் செய்தால், அது ஆயுள் தண்டனையாக (20 ஆண்டு கள்) குறைக்கப்படும்.

சீனாவில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டால், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்ப டுகிறது.

குற்றமற்றவராக இருந்தால் விடு தலை செய்யப்படுவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக் குள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். சிவில் வழக்குகளாக இருந்தால் ஆறு மாதத் திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.

கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சம மான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்குத் தரும் வகையில் நீதிமன்றங்களின் சூழல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் இந்தியக் குழுவினர்.

இந்நேரத்தில் முக்கியச் சம்பவம் ஒன்று நம் நினைவுக்கு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா விரதம் இருந்தார் நீதிபதி ஒருவர். ஏன் தெரியுமா? அவர் பணியாற்றும் நீதி மன்றத்தின் கட்டிடம் படுமோச மாம்.

நீதிபதி அமர்வதற்கு ஒழுங்கான நாற்காலிகூட அங்கு இல்லையாம்!