Monday, July 12, 2010

ஆண்டர்சன் விவகாரம்: தகவல் அளிக்க சிபிஐ மறுப்பு

போபால் விஷவாயு படுகொலையில் முக்கியக் குற்றவாளியான ஆண்டர்சனை நாடு கடத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கும், மத்திய புலனாய்வுக் கழகத்திற்கும் (சிபிஐ) இடையே நடை பெற்ற தகவல் பரிமாற்றங்களை வெளியிட முடியாது என்று சிபிஐ பதில் அளித் துள்ளது.


ஆண்டர்சனை நாடு கடத்துவது குறித்து கோரிக்கையை தொடர வேண் டாம் என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, போபால் பேரழிவு சம்பவம் தொடர்பாக 1994-95ல் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பான விப ரங்களை அறிய தகவல் உரிமைச் சட் டத்தின் கீழ் அபிஷேக் சுக்லா என்பவர் சிபிஐ.,க்கு மனுச் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மேற்கண்டவாறு தகவல் தர இயலாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆண்டர்சனை மீண்டும் இந்தி யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பழைய விபரங்களை வெளியிடுவது தற்போதைய நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக் கும் என்று சிபிஐ தனது பதிலில் குறிப் பிட்டுள்ளது.

1984-ல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோருக்கு நிரந்தரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த முக்கியக் குற்றவாளி ஆண்டர்சன் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.