Tuesday, July 27, 2010
தகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு
Thursday, July 22, 2010
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கொலையில் பாஜக எம்.பி.க்கு தொடர்பு
குஜராத் கிர் வனப்பகுதி யில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கும் சுரங்கங்கள் பற்றி அமித் ஜித்வா பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்குத் தொடர்ந்த சிலநாட்களுக் குள் அடையாளம் தெரி யாத மர்மநபர்களால் அமித் சுட்டுக் கொல்லப்பட்டார். செவ்வாயன்று இரவு அவர் தனது வழக்கறிஞரைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது சுடப்பட்டுள்ளார்.
டினு சோலங்கியைத் தொடர்பு கொள்வதற்காக பலமுறை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண் டபோதும், அலுவலகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவரு டன் தொடர்பு கொள்ள இயலவில்லை.
அமித் ஜித்வாவின் தந்தை பிகாபாய் ஜித்வா,”எனது மகனைக் கொலை செய்த பின்னணியில் உள்ளவர் டினு சோலங்கி எம்.பி தான். அவர் பல தடவை என் மகனை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஐ.கே. ஜடேஜா இதுபற்றிக் கருத்துக் கூற மறுத்து விட்டார்.
மேலும், இது அரசியல் பிரச்சனையல்ல. இது போன்ற குற்றச்சாட்டுகள் சகஜம். அவை நிரூபிக்கப்பட்டால் தான் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித் தார்.
கொலை செய்யப்பட்ட அமித் ஜித்வா தகவல் அறி யும் உரிமைச்சட்டத்தில் தீவிர ஆர்வலராக இருந்தார். குறிப்பாக வனவிலங்கு களைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். பிரபல திரைப்பட நடிகர் அமீர் கான் சிங்காரா வனப்பகுதி யில் மிருகங்களை வேட் டையாடிய வழக்கில் புஜ் செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப் பை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறுமாறு மற்றவர் களுக்கும் பயிற்சி அளித்தார். தற்போது கிர் வனப்பகுதி யில் திருட்டுத்தனமாக மணல்குவாரி அமைத்து மணல் திருடுகிறவர்கள் அதிகரித்துள்ளனர். ஜூனா கத் மாவட்டம் கிர் வனப் பகுதியில் மணல் திருடு வதை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் அம்ரேலி மாவட்டம் கம்பா தாலுகா வில் கிர் இயற்கை இளை ஞர் மன்றம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.
பொதுநலவழக்கில் லோக் அயுக்தா தொடங்கு வதில் அரசின் செயலற்ற தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரு டைய பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், காலியாக உள்ள பணியிடங் களில் தகவல் அளிக்கும் அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
Monday, July 12, 2010
ஆண்டர்சன் விவகாரம்: தகவல் அளிக்க சிபிஐ மறுப்பு
ஆண்டர்சனை நாடு கடத்துவது குறித்து கோரிக்கையை தொடர வேண் டாம் என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, போபால் பேரழிவு சம்பவம் தொடர்பாக 1994-95ல் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, இதுதொடர்பான விப ரங்களை அறிய தகவல் உரிமைச் சட் டத்தின் கீழ் அபிஷேக் சுக்லா என்பவர் சிபிஐ.,க்கு மனுச் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மேற்கண்டவாறு தகவல் தர இயலாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஆண்டர்சனை மீண்டும் இந்தி யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பழைய விபரங்களை வெளியிடுவது தற்போதைய நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக் கும் என்று சிபிஐ தனது பதிலில் குறிப் பிட்டுள்ளது.
1984-ல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோருக்கு நிரந்தரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஆனால், இந்த முக்கியக் குற்றவாளி ஆண்டர்சன் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 20, 2010
அரசாங்கத்தில் உங்கள் வேலை நடக்க வேண்டுமா
தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்களின் அனுபவங்களைக்கேட்டால், அந்தச் சட்டத்தின் வலிமை தெளிவாகப் புரியும். சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பாத்திர வியாபாரி சங்கர். இவருடைய ரேஷன்கார்டு ஐந்து வருடங்களுக்கு முன்னால் காணாமல் போனது.
""மாசந்தோறும் ராயபுரம் குடிமைப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்துக்குப் போய் நான் புது ரேஷன் கார்டு கேட்குறதும் அங்குள்ள ஊழியர்கள் பொறுப்பு இல்லாம பதில் சொல்றதுமா அஞ்சு வருஷம் போயிடுச்சு. வெறுத்துப்போயிட்டேன். தற்செயலா தகவல் உரிமைச்சட்டத்தைப் பற்றி ஒரு அமைப்பு மூலமா தெரிய வந்துச்சு. ரேஷன் கார்டு ஏன் கொடுக்கலை. என்ன சான்றுகளை எதிர்பார்க்குறீங்க, ரேஷன்கார்டு கேட்குறவருக்கு விதிமுறைப்படி எத்தனை நாளுக்குள்ள கொடுக்கணும்னு பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுதி, ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக்கடிதத்துக்கு அவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. "ரேஷன்கார்டு ரெடி'னு பதறியடிச்சுட்டு எனக்குத் தகவல்வந்துச்சு. சிவில் சப்ளைஸ் ஆஃபிசில் வழக்கமா அலட்சியமா பதில் சொல்லிட்டிருந்த ஊழியர்கள் எல்லாம் ரொம்ப மரியாதையா என்னை உட்கார வச்சுப் பேசுனாங்க. அஞ்சு வருஷமா எனக்குக் கிடைக்காத ரேஷன் கார்டு ஒரே வாரத்துல கிடைச்சது'' என்று இன்னும் அந்த ஆச்சர்யம் விலகாமல் சொல்கிறார் சங்கர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் ஐ.டி.ஊழியர் பிரசன்னா தனது பெற்றோரின் பாஸ்போர்ட்டுக்காகப் போராடிய அனுபவம் இது. ""பாஸ்போர்ட் கேட்குறவங்களோட முகவரியை போலீஸ் நேரில் சரிபார்த்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பணும். எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் தேவையில்லாத டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட கேட்டாங்க. என்னோட வயசான அம்மா, அப்பாவை ஸ்டேஷனுக்கு அடிக்கடி வரவழைச்சு அலையவிட்டாங்க. விதிமுறைப்படி தேவையான சான்றுகளா நான் காட்டினதை எல்லாம் கண்டுக்காம, "அந்த முகவரியில் யாரும் அப்படி வசிக்கலை'னு பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கெல்லாம் தெளிவான விளக்கம கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கமிஷனர் ஆபீசுக்கு கடிதம் அனுப்பினேன். ரெண்டே நாளில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு அட்ரஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க'' என்கிறார் பிரசன்னா. தகவல் உரிமைச் சட்டத்தின் 7(1) பிரிவின்பிடி தகவல் கேட்டதால் வழக்கத்தைவிட அதிரடியாக இவரது வேலை நடந்திருக்கிறது. விண்ணப்பதாரரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதகம் ஏற்படும் சூழ்நிலை எனில் 48 மணி நேரங்களுக்குள் தகவல் தர வேண்டும் என்பது இந்தப் பிரிவின் அடிப்படை விதி.
பல்லாவரம் அருகே உள்ளே ஒரு ஊரில் பல வருடங்களாக கவனிக்கப்படாமல் கிடந்த தங்களது தெருவுக்காக தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தியவர் கல்லூரிப் பேராசிரியர் லூர்து சின்னப்பன். ""எங்க தெருவுக்கு ஏன் ரோடு போடலைனு கேட்டு ஊராட்சியின் நிர்வாக அதிகாரிக்கு மனுபோட்டேன். என்னோட கேள்விகளுக்கு அவங்களால் பதில் தர முடியலை. ஆனா சில நாட்களிலேயே ரோடு போடுறதுக்கு சர்வே பண்ண ஆள் வந்துட்டாங்க. சுமாரான �ரோடாக இருந்தாலும், இப்போ சிரமம் இல்லாம நடமாட முடியுது'' என்று நிறைவாகச் சொல்கிற சின்னப்பன் தகவல் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியிடம் கேட்டபோது,""மின் இணைப்பு கொடுக்குறதுக்காக மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட தொகையை "டெபாசிட்'டாக வசூலிக்குது. அந்த டெபாசிட்டை எல்லாம் என்ன பண்றீங்கனு ஆர்.டி.ஐ. மூலமா ஒரு மனு போட்டுக் கேட்டேன். ஒவ்வொரு கன்ஸ்யூமரோட டெபாசிட்டுக்கும் ஆறு சதவீத வட்டி போட்டு அவங்க அக்கவுண்ட்ல சேர்த்துருவோம்னு மின்சார வாரியத்துலேர்ந்து பதில் வந்தது. ஒருத்தர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செஞ்சா, எதிர் மனுதாரர் சொல்ற பதிலை அவர் எழுத்துப்பூர்வமா பார்க்க முடியாது. நீதிமன்ற விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாம கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தித்தான் பல வழக்குகளில் எதிர்மனுதாரர்களின் ஸ்டேட்மென்ட்டை போலீசிடமிருந்து வாங்க முடியுது'' என்று பல உதாரணங்களைச் சொல்லி பிரமிப்பூட்டுகிறார்.
சமீபத்தில் தகவல் உரிமைச்சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அந்தச் சட்டத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் முயற்சிதான் என்கிறார்கள் சிலர்.
""தற்போது நடைமுறையில் இருக்குற தகவல் உரிமைச்சட்டத்திலேயே பல குறைகள் இருக்கு. உதாரணமா, உதவி தாசில்தாரிடம் தகவல் கேட்கிற மனுவுக்கு பதில் கிடைக்கலைனா, நாம அவருக்கு மேலே இருக்குற தாசில்தாரிடம் தான் மேல் முறையீடு பண்ணணும். தனக்கு ஆதரவா செயல்பட்ட உதவி தாசில்தாருக்கு எதிரா தாசில்தார் எப்படி நடவடிக்கை எடுப்பார்? ஒரே மனுவிலேய தகவல் கிடைக்குறதை அரசு கட்டாயமாக்கணும். தகவல் கொடுக்கறதுக்கான 30 நாள் கால அவகாசத்தையும் குறைக்கணும். அதையெல்லாம் செய்யாம புது திருத்தங்களைப் பற்றி அதிகாரிகள் பேசுறது தேவையில்லாத வேலை''
ஆனந்த் செல்லையா
Wednesday, March 10, 2010
"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டது'
இதை, எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம் பிற்கு உட்பட்டதே. அந்தச் சட் டப்படி நீதிபதிகள் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாம்' என, உத்தரவிட்டது.தனி நீதிபதி அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில், சுப்ரீம் கோர்ட் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் முரளிதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித் துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட் பட்டதே. நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு என்பது, நீதிபதியின் தனிப்பட்ட உரிமை தொடர்பானது அல்ல. அவருக்கு உள்ள பொறுப்பு தொடர் பானது.
தகவல் உரிமைச் சட்டப்படி, தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது ஆணையம். கீழ் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எல்லாம் பணி விதிமுறை களுக்கு கட்டுப்பட்டு, தங்களின் சொத்து விவரங்களை அறிவிக் கின்றனர்.அப்படிப்பட்ட நிலையில், மேல் கோர்ட் நீதிபதிகள் மட் டும், தங்களுக்கு அதுபோன்ற பொறுப்பு இல்லை என, சொல்ல முடியாது.
அவர்கள் தங்களின் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பொறுப்புடைமையை உறுதி செய்ய கீழ்கோர்ட் நீதிபதிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்கிற போது, அரசியல் சட்ட கோர்ட்டுகளின் நீதிபதிகளும் தங்கள் ஆஸ்தி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமே.நாட்டில் முழுமையான ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் எனில், நீதித்துறை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம்.ஆகவே, தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வராது என்ற சுப்ரீம் கோர்ட்டின் மனுவை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட், தங்கள் கோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்ய உள்ளது. ஹோலி விடுமுறை முடிந்து ஒருவார காலத்துக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் இன்று திறக்கப் படுகிறது. அட்டர்னி ஜெனரல் வாகன் வதி சுப்ரீம் கோர்ட்டின் சார்பில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து வாதாட உள்ளார். ஐகோர்ட்டின் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படி வாகன்வதி, தனது வாதத்தில் குறிப்பிட உள்ளார்.