Wednesday, January 19, 2011

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேசத்தின் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டதை மறைக்கப்பார்ப்பதா


வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து முழு தகவல்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு தயக்கம் காட்டுவதாகவும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் விஷயத்தில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுவதாகவும் உள்ளது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வங்கிகளில் பல லட்சம் கோடி கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த கறுப்புப் பணத்தை முதலீடு செய்த இந்திய நபர்கள் யார் என்கிற விவரத்தை வெளியே கொண்டு வருவ தில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்றம் புதனன்று தெரிவித்தது.

சுவீஸ் வங்கிகளில் இந் திய தலைவர்கள், தொழிலதிபர்கள் ரூ.21 லட்சம் கோடியை பதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணை யதளமும் செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் பதுக்கல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முன் னாள் அமைச்சர் ராம்ஜெத் மலானி சார்பில் பொது நலன் வழக்கு தொடரப்பட் டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வாயம், அயல்நாடுகளில் உள்ள இந்திய கறுப்புப் பணம் குறித்து அரசு தகவல் பெறு வதில் உள்ள தயக்கத்தை சுட்டிக்காட்டியதுடன் இவ்விவகாரத்தில் அரசுக்கு அக்கறையில்லை என்ப தையே இது காட்டுகிறது என்று கண்டித்தது.

அயல்நாடுகளில் பதுக் கப்பட்ட இந்தியப் பணம் மறைக்கப்பட்ட விவகா ரத்தை பேசும்போது, பல நாடுகளுடன் மேற்கொள் ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேச வேண்டியுள் ளது என்றும் உச்சநீதிமன் றம் கடுமையாக கூறியது. அரசு தாக்கல்செய்துள்ள அதிகாரப்பூர்வ அறிக் கையில் நிதித்துறை செய லாளர் கையெழுத்திட வேண் டும். ஆனால், இயக்குநர் அளவிலான அதிகாரியே கையெழுத்திட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட் டிக்காட்டியது. அயல்நாடு களில் குறிப்பிட்ட இந்தி யர்களால் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் குறித்து அனைத்து விபரங்களும் தெரியவர வேண்டும் என் றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

No comments:

Post a Comment