Sunday, January 9, 2011

23 வயதில் நீதிபதியாகி விட முடியும்


சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும் சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும், முடிக்கப்படுகின்றன.ஹைடெக் வசதிகள், சொகுசான நீதிமன்றக்கூடங்கள் என வியக்க வைக்கிறது சீனாவின் நீதித்துறை

சீனாவின் நீதித்துறை செயல்பாடு களை அறிந்து கொள்வதற்காக உச்ச நீதி மன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு ஒன்று சமீபத்தில் சீனாவுக்குச் சென்றது.

இந்திய பத்திரிகையாளர்கள் சில ரும் உடன் சென்றிருந்தனர். நீதித் துறைக்கு சீன அரசு கொடுத்து வரும் முக்கியத்து வங்கள் குறித்து அவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் வியப்பை அளிக்கின்றன.

சீனாவில் ஒருவரால் 23 வயதில் நீதிபதியாகிவிட முடியும். தேசிய நீதித்துறை தேர்வில் (இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கு ஒப்பானது) வெற்றி பெற்று , உரிய பயிற்சி களை முடித்துவிட்டால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விடலாம். நீதிப தியாக ஆகவேண்டும் என்றால் வழக் கறிஞராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தேசிய நீதித்துறை தேர்வு எழுத பட்டப்படிப்பை நிறைவு செய்தி ருக்க வேண்டும்.

ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றங்களை இந்தியக் குழுவினர் பார்வையிட்டனர். நீதி மன்றங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளைக் கண்டு அவர் கள் அசந்து போயினர்.

நீதிமன்றக் கூடங்கள் ஒரு காப்ப ரேட் நிறுவன அலுவலகத்தைப் போல் காட்சியளிக்கிறதாம். அதி நவீனத் தொழில் வசதிகளுடன் கூடிய சொகுசான நீதிமன்றக் கூடங் களைக் கண்டு வியந்து நீதிபதி சிர் புர்கர், அதற்காக சீன நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சீனாவில் மொத்தம் 1,90,000 நீதி பதிகள் உள்ளனர். அவர்களில் 500 நீதி பதிகளும் ,200 உதவி நீதிபதிகளும் மக் கள் சீனத்தின் உச்சநீதிமன்றங்களில் உள்ளனர்.

சீன நீதித்துறையின் ஒட்டு மொத் தப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,20,000.

ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக் கப்பட்டவுடனேயே முறையிடுபவர் மற்றும் எதிரியின் பெயர்கள் அங் குள்ள திரையில் தெரியுமாம். வழக்கு கள் நடைபெறும் முறை மிகவும் நவீனமாக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்காக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த தக வல்கள், அவரது கைரேகை மற்றும் அவரிடம் இருந்து சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகி யவை திரையில் தெரியுமாம்.

சாட்சிகள் அளித்த வாக்கு மூலங்களை எதிர்த் தரப்பு வழக்கறி ஞரோ, அரசுத் தரப்பு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ பார்க்கலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

கீழமை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆறு மாதக் காலத்திற்குள் ம ரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தண்டனை பெற்றவர் கருணை மனு செய்தால் மரண தண்டனை நிறைவேற்ற 2 ஆண்டுகள் ஆகிவிடும். அந்தத் தண்டனையில் மேல் நீதி மன்றங்கள் திருத்தம் செய்தால், அது ஆயுள் தண்டனையாக (20 ஆண்டு கள்) குறைக்கப்படும்.

சீனாவில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டால், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்ப டுகிறது.

குற்றமற்றவராக இருந்தால் விடு தலை செய்யப்படுவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக் குள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். சிவில் வழக்குகளாக இருந்தால் ஆறு மாதத் திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.

கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சம மான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்குத் தரும் வகையில் நீதிமன்றங்களின் சூழல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் இந்தியக் குழுவினர்.

இந்நேரத்தில் முக்கியச் சம்பவம் ஒன்று நம் நினைவுக்கு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா விரதம் இருந்தார் நீதிபதி ஒருவர். ஏன் தெரியுமா? அவர் பணியாற்றும் நீதி மன்றத்தின் கட்டிடம் படுமோச மாம்.

நீதிபதி அமர்வதற்கு ஒழுங்கான நாற்காலிகூட அங்கு இல்லையாம்!

Sunday, January 2, 2011

தகவல் உரிமை ஆர்வலர் தாக்கப்பட்டார்


பிரபல தகவல் உரிமை ஆர்வலர் அருண்மானே அடையாளம் தெரியாத நபர்களால் டாலே காவ் தபாடே அருகில் தாக்கப்பட்டார். கழிகளால் அடிக்கப்பட்ட மானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை தீவிரமானவையில்லை என்று புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் பி.டேகாவோங்கர் செய்தியாளர் களிடம் கூறினார்.

புனே மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் சதீஷ் ஷெட்டியின் நெருக்கமான சகாவான மானே தகவல் அறியும் உரிமை இயக்கத் தின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை கையாண்டு வருகிறார்.

Tuesday, December 21, 2010

தகவல் அறியும் சட்டத்தை பாதுகாப்போம்

Right to Information Act (RTI) என்ற தகவல் அறியும் சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதன் குரல் வளையை நெரிக்க அரசு முயல்வதாக தெரிகிறது.
குறிப்பாக விண்ணப்பங்கள் 250 வார்த்தைகளுக்குள் இருக்கணுமாம்.

250 வார்த்தைகளில் எப்படி நாம் விரும்பும் விவரம் கேட்டபது

இதைத் தவிர இன்னும் பல நெருக்கடிகள் நிறைவேத்த இருக்காம். விவரங்களை இங்கே க்ளிக்கி தெரிந்து கொண்டு பெட்டிஷனில் கையெழுத்து இடவும்.

பரப்பவும்.

நன்றி

http://www.petitiononline.com/rtisave/

முக்கிய திருத்தங்கள்:

தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.

Friday, December 17, 2010

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம்.


காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி யெழுப்பியிருந்த விவகா ரத்தில் தகுந்த பதிலளிக்காத இந்திய ஒலிம்பிக் சங்கத் திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.


தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் செய் யப்பட்ட விண்ணப்பத் திற்கு 100 நாட்களுக்கு மேல் கடந்த பிறகும் தகவல் அளிக்கத்தவறியதால் மத்திய தகவல் ஆணையர் எம்.எல்.வர்மா ரூ. 25,000 அபராதம் விதித்தார்.

மற்றொரு வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம் 80 நாட்களுக்கு மேலாகத் தாமதம் செய்த காரணத் தால் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சாவு மணி அடிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்


2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை டிசம்பர் 27-ம் தேதிக்குள் usrti-​dopt​@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய திருத்தங்கள்: தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.

முடக்க முயற்சி: இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது தொடர்ந்து ஊழல் வழக்குகள் வெளியில் கசிந்து விடுவதால் கலவரப்பட்டு அந்த சட்டத்தை மரணக்குழியில் தள்ள பார்க்கிறது மத்திய அரசு உடனே மேற்கண்ட மிண் அஞ்சல் முகவரிக்கு பதிவர்கள் அணைவரும் தங்கள் கருத்துகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது.

மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம்.

முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது.

எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன .