Friday, January 20, 2012

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாரையும் கொண்டு வரலாம்


மக்கள் நினைத்தால் தனி யார் துறையையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் கொண்டுவர முடியும் என்று தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) சத்யா னந்தா மிஷ்ரா கூறினார்.

தகவல் அறியும் உரி மைச் சட்டம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி முகாமை சென்னையில் வெள்ளி யன்று (ஜன.20) தலைமை ஆணையர் தொடங்கிவைத் தார். ஹைதராபாத்தில் உள்ள பொதுத்துறை தொழில்கள் கல்லூரி (ஐபிஇ), நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) இரண்டும் இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.

செய்தியாளர்களின் கேள் விகளுக்கு பதிலளித்த சத்யா னந்தா மிஸ்ரா, “தற்போது அரசுத் துறை, பொதுத்துறை இரண் டும் பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ள இந்தச் சட்டம் தானாக வந்துவிடவில்லை. மக்களின் வலுவான எதிர் பார்ப்பின் அடிப்படையில் நீண்ட நெடும் இயக்கத்தின் விளைவாகவே இந்தச் சட் டம் வந்தது. அதேபோல் மக்கள் வலுவாக விரும்பு வார்களானால் எதிர்காலத் தில் தனியார் துறையும் இச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படக் கூடும்,” என்று கூறினார்.

அதேநேரத்தில் அரசு டன் பணி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தொடர்புகள் உள்ள தனியார் நிறுவனங் கள் குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட அரசு அலு வலகத்திலிருந்து பெறுவதற் கான விதி சட்டத்தில் இருக் கிறது. எனினும், ஒரு தனி யார் நிறுவனம் தனது செயல் பாடுகள் தொடர்பான தக வல்கள் அரசு அலுவலகத்தி லிருந்து வெளியே செல்லக் கூடும் எனக் கருதுமானால், அந்தத் தகவல்களைத் தெரி விக்க மறுக்கக்கூடும் என் றார் அவர்.

சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் தேவைப்படுகிறதா என்று கேட்கப்பட்டபோது, “சட்டம் செயல்படத் தொடங் கிய கடந்த ஆறாண்டு அனுப வத்தில், அதன் அடிப்ப டைக் கட்டமைப்பில் மாற் றம் தேவைப்படவில்லை என்றே கருதுகிறோம். எனி னும் சில விதிகளுக்கான விளக்கங்கள் தேவைப்பட லாம். தகவல் வேண்டுகோள் தொடர்பான விசாரணை அமைப்பு ஏற்படுத்திக் கொள் ளும் வாய்ப்பு சட்டத்தில் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி யுள்ளது. அத்தகைய திருத் தங்களை அரசியல் தலை மைகள்தான் (நாடாளு மன்றத்தின் மூலமாக) செய்ய வேண்டும்,”என்று அவர் பதிலளித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “குறிப் பாக எந்த ஒரு துறைக்கும் சட்டத்திலிருந்து நேரடி யாக விலக்கு அளிக்கப்பட வில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம், பாது காப்பு, அண்டை நாடுகளு டனான உறவு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய தகவல் களை தெரிவிக்க மறுக்க லாம்,” என சட்டத்தில் உள் ளது என்றார்.

முன்னதாக அவர் தொடக்க உரையில், கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கும், மாநில அரசு அலுவலகங் களுக்குமாக பொதுமக்களி டம் இருந்து சுமார் 15 லட் சத்து 40 ஆயிரம் தகவல் கோரும் மனுக்களும், மத்திய தகவல் ஆணையத் துக்கு சுமார் 25 ஆயிரம் மனுக்களும் வந்தன என்று கூறினார். “எனினும் மக்கள் அமைப்புகளின் கண் ணோட்டத்தில் இது மன நிறைவு அளிக்கக்கூடிய புள்ளிவிவரம் அல்ல. இந்தி யாவைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக் காவில் இதைவிட அதிக மான மனுக்கள் வருகின்றன என்பதை மக்கள் அமைப்பு கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இதுகுறித்த விழிப் புணர்வை பரவலாகக் கொண்டுசெல்ல வேண்டி யுள்ளது,”என்றார்.

வரலாறு நெடுகிலும் ஆட்சியாளர்கள் தங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள் என்ற எதிர் பார்ப்பில், தங்களுடைய ஒரு பகுதி சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து வந்திருக் கிறார்கள். அதற்கு உரிய முறையில் அரசு செயல்படும் போதுதான் அதன் நம்பகத் தன்மை நீடிக்க முடியும். நம்பகத்தன்மை இல்லாத அரசு ஆபத்தானது. எனவே அரசின் நம்பகத்தன்மை யைப் பாதுகாக்கவே அரசி யல் கட்டமைப்பால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட் டது.

அரசு அலுவலகங்களில் மலிந்துள்ள முறைகேடுகள் காரணமாக மக்கள் அதி ருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கேட்கிற தகவல்கள் கிடைக் கும் என்ற வாக்குறுதி நிறை வேற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட தகவலை அனுப்பு வது மட்டுமே தகவல் அலு வலர்களின் பணியாக இருக்க வேண்டும். அதன் மீது கருத்துச் சொல்லக் கூடாது. பொதுநல நோக் கம் அல்லது தனிப்பட்ட நோக்கம் எதுவானாலும் மக்கள் கேட்கிற தகவல் களை தரவேண்டிய பொறுப்பு அலுவலர்களுக்கு உள்ளது.

அலுவலகத்தில் நடை பெறும் பணிகள் அனைத் தையும் பதிவு செய்தல், ஆவ ணங்களை வகைப்படுத்து தல், தொடர்ந்து கண்கா ணித்து ஈடுபடுதல் ஆகிய வழிமுறைகள் மூலம் இந்தச் சட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என் றும் மிஷ்ரா கூறினார். ஒரு தகவல் கேட்கப்படுகிற போது அதை எவ்வாறு தராமல் இருப்பது, அல்லது எவ்வாறு குறைந்தபட்சத் தகவலை மட்டும் தெரிவிப் பது என்பதுதான் அதிகாரி களின் அணுகுமுறையாக இருக்கிறது. ஒரு தகவலை ரகசியமாக வைத்திருப்பது ஒரு அதிகாரத்தைத் தருகி றது. குடியாட்சியில் அந்த அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும். எனவே கேட்கப்படுகிற தகவல் களை முழுமையாக வழங்க அதிகாரிகள் முன்வர வேண் டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணை யர் ஸ்ரீபதி, என்எல்சி அதி காரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில், என்எல்சி சுரங்கப் பிரிவு இயக்குநர் சுரேந்திர மோகன் ஆதார உரையாற்றினார். ஐபிஇ இயக்குநர் ராம் குமார் மிஷ்ரா முகாமின் நோக்கம் குறித்து விளக்கினார். என்எல்சி மனித வளத் துறை இயக்குநர் எஸ்.கே. ஆச்சார்யா வரவேற்றார். ஐபிஇ துணைப் பேராசிரி யர் கீதா போதராஜூ நன்றி கூறினார்.

1 comment:

Guru said...

i need to know what are the works done by my MP and MLA over the years...how can i get it through this act(sorry i am not know Tamil type writing)

Post a Comment